ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாச உள்ளடக்கங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை - அனுராக் தாக்கூர் எச்சரிக்கை

0 1098
ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான மற்றும் அவதூறு உள்ளடக்கங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான மற்றும் அவதூறு உள்ளடக்கங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் பேட்டியளித்த அவர், ஓடிடி தளங்களில் ஆபாசமான உள்ளடக்கம் குறித்து அதிகரிக்கும் புகார்கள் மீது அரசு தீவிரமாக உள்ளதாகவும், தேவைப்பட்டால் விதிமுறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

மேலும், ஓடிடி தளங்களில் படைப்பாற்றலுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிலையில், படைப்பாற்றலின் பெயரால் அவதூறுகளை ஏற்க முடியாது என்றும் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments