உத்தரப்பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 5 பேர் உயிரிழப்பு..!

0 949

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

கர்வா கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் விறகு சேகரிப்பதற்காக மலையடிவாரத்திற்குச் சென்றிருந்தபோது கனமழை பெய்துள்ளது.

அதேநேரத்தில், மலையில் பெய்த மழையால் பெருக்கெடுத்த திடீர் வெள்ளம் 6 பேரையும் இழுத்துச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில், மீட்புப்பணியில் இறங்கிய போலீசார் பல்வேறு பகுதிகளிலிருந்து 5 பேரின் சடலத்தை மீட்டுள்ள நிலையில் ஒரு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments