போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடி, ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங்..!

0 1757

பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதாகி உள்ளனர்.

அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாத போதகராக அம்ரித்பால் சிங், பஞ்சாபைத் தனிநாடாக அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்திவரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவளராகவும் உள்ளார்.

இந்நிலையில், ஜலந்தர் மாவட்டத்தில் ஷாகோட் பகுதியில் தொண்டர்களுடன் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்-கை, தடுத்து நிறுத்திய பஞ்சாப் சிறப்பு போலீசார் சினிமா பாணியில் அவரை துரத்தி சுற்றி வளைத்தனர்.

அம்ரித்பால் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அதிகாரி கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மாநிலம் முழுதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், வதந்திகளைத் தடுக்க இன்று பிற்பகல் வரை இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments