பெப்பர் ஸ்பிரே அடித்து சக ஊழியரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது..!

சென்னையில், பெப்பர் ஸ்பிரே அடித்து சக ஊழியரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Money exchange நிறுவனத்தில் பணிபுரியும் ஜாகீர் உசேன், நேற்று மாலை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, தன்னுடன் பணிபுரியும் காஜாமொய்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மண்ணடியில் உள்ள அலுவலகம் நோக்கி சென்றுள்ளார்.
யானை கவுனி அருகே வந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஜாகீர் உசேனின் வாகனத்தின் மீது இடித்து மோதி கீழே தள்ளி, கண்ணில் பெப்பர் ஸ்ப்ரேவை அடித்துவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
ஜாகீர் உசேன் போலீசில் புகாரளித்த நிலையில், அவருடன் சென்ற காஜா மொய்தீன் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில், காஜா மொய்தீன் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து திட்டம் தீட்டி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்த போலீசார், 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Comments