ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை..!

0 1074

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஜெயந்தின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்த், 2010ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து மேஜராக பதவி உயர்வு பெற்றார்.

இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் நேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஜெயந்த் உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட மேஜர் ஜெயந்தின் உடலுக்கு மதுரை ஆட்சியர் உள்ளிட்டோ மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான ஜெயமங்கலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பெரியசாமி, தேனி ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மேஜர் ஜெயந்தின் உடல் ஊர்வலமாக மயான கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments