"திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை" - அண்ணாமலை

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என அண்ணாமலை கூறியதாக வெளியான கருத்தை வரவேற்பதாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக இடம்பெறும் கூட்டணியை அதிமுக தான் முடிவு செய்யும் என்றும் அக்கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
Comments