கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு..!

0 1936

கன்னியாகுமரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

3 நாட்கள் பயணமாக தென்னிந்தியாவுக்கு வந்த குடியரசுத் தலைவர், இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்திற்கு வந்திறங்கினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

அங்கிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு தளத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர், படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பின், மீண்டும் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார்.

குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments