'பல்வேறு தோல்விகளை கடந்தே இந்நிலையை அடைந்தேன்' - ஆளுநர் ஆர்.என்.ரவி உணர்ச்சிமயமாக பேச்சு!

0 1687

தனக்கும் பல்வேறு தோல்விகள் ஏற்பட்டதாகவும், அவற்றையெல்லாம் கடந்து தான் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளார்.

சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அப்போது, தான் சில்வர் ஸ்பூன் குடும்பத்தில் பிறக்கவில்லை என கூறிய ஆளுநர், சாலை வசதிகள் இல்லாத கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கல்வி கற்றதாகவும், மண்ணெண்ணெய் விளக்கொளியில் படித்து முன்னேறியதாகவும் உணர்ச்சிமயமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments