சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை.. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ந்த சூழல்!

0 1981

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று காலை முதல் சைதாப்பேட்டை, நந்தனம், அடையார் உட்பட நகரின் பல பகுதிகளில் பரவலாக மழைபெய்தது.

கோயம்பேடு, தலைமைச்செயலகம், சென்ட்ரல், கே.கே.நகர், அசோக்நகர், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைபெய்த நிலையில், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments