பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியத் தந்தை கைது!

0 2182

பெங்களூருவில், பெற்ற மகளை மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்ற ஆஷா, கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை பிரிந்து பெற்றோருடன் 2 ஆண்டுகளாக வசித்துவந்தார்.

பெற்றோரை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட ஆஷா, வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் தந்தை ரமேஷ் உடன் சண்டையிட்டுவிட்டு இரவில் உறங்க சென்ற ஆஷாவை, அவர் விறகு கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

ஆஷா தற்கொலை செய்துகொண்டதாக ரமேஷ் தெரிவித்தநிலையில், போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments