காதலனின் போதைப் பழக்கம் அறிந்து காதலை கைவிட்ட நர்சிங் மாணவி.. ஆத்திரத்தில் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் கைது!
விழுப்புரம் அருகே தனது போதைப் பழக்கம் தெரிந்து காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் அவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
விக்கிரவாண்டி அடுத்துள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த 20 வயதான தரணி, நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். காலை வயல் பகுதிக்குச் சென்றபோது இளைஞர் ஒருவரால் தரணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த நபர் பக்கத்து ஊரான மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் என்பதும், இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததும் தெரியவந்தது.
கணேசனைப் பிடித்து விசாரித்தபோது, தான் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானதை அறிந்து தரணி தன்னிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகவும் இனி என்னிடம் எப்போதுமே பேச வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
ஆந்திராவிலுள்ள செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றி வந்த கணேசன் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments