போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாததை கண்டித்த பெற்றோரை எரித்த மகன்..

புதுச்சேரியில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த பெற்றோரை எண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்காஞ்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி லதா தம்பதியின் இரண்டாவது மகன் புகழ்மணி தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கண்பார்வை பாதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த புகழ்மணியிடம் லென்ஸ் பொருத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த புகழ்மணி தலையணையில் எண்ணெயை ஊற்றி எரித்து அதனை பெற்றோரின் மீது போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
உடல் முழுவதும் தீப்பற்றியதில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயம் அடைந்த தட்சிணாமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments