''சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு தோளோடு தோள் கொடுத்து அமெரிக்கா உதவ வேண்டும்..'' - செனட் சபையில் தீர்மானம்..!

சீனாவுடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து உதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய பகுதியான அருணாசலப் பிரதேச மாநிலத்தை சீனா தங்களுக்கு சொந்தமான பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. லடாக் எல்லையிலும் படைகளை இருநாடுகளும் குவித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் எம்பிக்கள் பில் ஹேகர்டி (Bill Hagerty), ஜெப் மெர்க்லே (Jeff Merkley) ஆகியோர் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அதில், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், மெக்மோகன் கோட்டை இருநாடுகள் இடையேயான சர்வதேச எல்லையாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லை விவகாரத்தில் உண்மை நிலையை மாற்ற சீனா தான் முயற்சி செய்கிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments