வளர்ப்பு நாயால் வந்தது பிரச்சினை.. சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்..

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வளர்ப்பு நாய் லண்டன் பார்க்கில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வளர்ப்பு நாய் லண்டன் பார்க்கில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுஇடங்களில் சங்கிலியுடன் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டம் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அந்நாட்டு பிரதமராக உள்ள இந்திய வம்சாவழியான ரிஷி சுனக் குடும்பத்தினருடன் லண்டன், ஹைதி பூங்காவில் (Hyde Park) நடைப்பயிற்சி சென்ற கொண்டிருந்தபோது அவரது வளர்ப்பு நாயான நோவா சங்கிலி இல்லாமல் சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஏற்கனவே கொரோனா காலத்தில் கட்டுப்பாட்டை மீறியதாகவும், காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு புதுப்பிரச்சினை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments