பனி படர்ந்திருந்த வணிக வளாகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விபத்து..

0 1791
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், பனிப்படர்ந்து காணப்பட்ட வணிக வளாகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், பனிப்படர்ந்து காணப்பட்ட வணிக வளாகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

டுலுத் என்ற இடத்திலுள்ள மில்லர் ஹில் வணிக வளாகத்தின் மேற்கூரை முழுவதுமாக பனி படர்ந்திருந்த நிலையில், பனியை அகற்ற அங்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பணியில் ஈடுபட்டிருந்த போது ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த தொழிலாளர்கள், உடனடியாக பணியை நிறுத்திவிட்டு வெளியேறிய உடன், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments