காற்று மாசு பாதிப்பில் இந்தியா 8வது இடம்..!

0 1027

உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஸுவி ட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 131 நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 5வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 8வது இடத்தில் உள்ளது. இதில், முதல் 10 நகரங்களில் 6 இந்தி ய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்களும்,தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்களும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments