இங்கிலாந்தில், பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 5 கிலோ நகைகள் திருட்டு...!

0 1181

இங்கிலாந்தில் பட்டப்பகலில், நகைக்கடைக்குள் புகுந்து, 3 கோடி ரூபாய் நகைகளை திருடிச்சென்ற 5 பேர் கும்பலுக்கு, 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம், பிர்மிங்ஹாமில், சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்றை திருடி வந்த 5 பேர் கும்பல், வாகனத்தால் மோதி நகைக்கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கடைக்குள் புகுந்தது.

ஒருவன் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்ட, மற்றவர்கள் சம்மட்டியால் கண்ணாடி பேழைகளை உடைத்து நகைகளைத்திருடினர்.

வெறும் எழுபதே வினாடிகளில் திருட்டை அரங்கேற்றிவிட்டு, 5 கிலோ நகைகளுடன் தப்பிய கொள்ளை கும்பல், அடுத்த 2 மணி நேரத்தில், மற்றொரு நகை கடையில் திருட்டு நகைகளை விற்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments