டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒய்.எஸ்.சர்மிளா கைது..!

0 1000

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரசேகர ராவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் சர்மிளா, தெலுங்கானா அரசு செயல்படுத்தியுள்ள காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தவே டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் சர்மிளா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments