பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

0 1172

பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதிக ஆபத்து மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் வீடுகள் சேதமடைந்ததில், இடுபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments