யானையைக் கண்டு பயந்து பைக்குடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானையை பார்த்து பைக்கில் சென்ற முதியவர் தவறி கீழே விழுந்து உயிர் தப்பும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று மாலை திம்பம் மலையில் இருந்து தலமலை செல்லும் அடர்ந்த வனச்சாலையில் பைக்கில் சென்ற முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக தன் எதிரே யானை நிற்பதைக் கண்டார்.
இதனால் அச்சமடைந்த அவர் நிலை தடுமாறியதில் சாலையோர பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். பின்னர் அந்த முதியவர் உடனடியாக சுதாரித்து எழுந்து யானையிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தார்.
Comments