அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலா.. 75 அரசுப் பள்ளி மாணாக்கர்கள் தேர்வு..!

0 2007

சிறார் குறும்படப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வான 75 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகளில் திரையிடப்பட்ட சிறார் திரைப்படங்கள் குறித்து சிறந்த விமர்சனம் எழுதிய 185 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 7 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது.

பின்னர், நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் சிறப்பாக நடித்த சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி மீனாலோச்சினி உள்பட 75 பேர் தேர்வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments