அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா..!

0 1281

அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-க்கு 1 என்ற கணக்கில், பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்றது.

போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 480 ரன்களும், இந்தியா 571 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 175 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

ஆட்டநாயகன் விருது கோலிக்கும், தொடர் நாயகன் விருது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனிடையே, இலங்கை உடனான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments