சென்னை எழும்பூரில் பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து.. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

0 1144
சென்னை எழும்பூரில் பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து.. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

சென்னை எழும்பூரில் பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கெங்கு ரெட்டி சாலையில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவர் அரசு கைத்தறி கடையில் பணியாற்றி வருகிறார். தனது இரு மகன்களையும் பள்ளியில் விட்டுவிட்டு அரவிந்த் குமாரும், அவரது மனைவியும் பணிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக கீழ் தளத்தில் வசித்துவரும் உறவினர் அரவிந்த் குமாருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை கண்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரிட்ஜ் அல்லது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

8 மாதங்களுக்கு முன்பு வாங்கிய இந்த பிரிட்ஜ்க்கு ஸ்டெபிலைசர் தேவையில்லை என ஷோரூமில் தெரிவித்ததால் ஸ்டெபிலைசர் வாங்கவில்லை என அரவிந்த் குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments