விமான பயணத்தின்போது பயணி மரணம்.. சடலத்துடன் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்

விமான பயணத்தின்போது பயணி மரணம்.. சடலத்துடன் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்
டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்ற இண்டிகோ விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
இண்டிகோ 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டதன் காரணமாக கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் சென்றவுடன் சம்பந்தப்பட்ட பயணி உயிரிழந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக்குழுவினரால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், உயிரிழந்த செய்தியால் வருத்தமடைவதாகவும், இறந்தவரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
Comments