தனியாக நின்ற நபரை தாக்கி, கூகுள் பே செயலி மூலம் ரூ.50,000 பணம், தங்க மோதிரம் பறிப்பு - சகோதரர்கள் கைது

0 1253
தனியாக நின்ற நபரை தாக்கி, கூகுள் பே செயலி மூலம் ரூ.50,000 பணம், தங்க மோதிரம் பறிப்பு - சகோதரர்கள் கைது

தூத்துக்குடி அருகே தனியாக நின்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து கூகுல் பே செயலி மூலம் பணத்தை பறித்துச் சென்ற சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி, பொட்டல் காடு பகுதியில், தனது இருசக்கர வாகனத்தோடு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பாலாஜியை தாக்கியதுடன், அவரிடமிருந்த ஸ்மார்ட் வாட்ச், தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவரது செல்போனிலிருந்து கூகுள் பே செயலி மூலம் தங்களது நம்பருக்கு ரூபாய் 50 ஆயிரத்தை அனுப்ப சொல்லி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

வழக்கமாக கொள்ளையடிக்கும் நபர்கள் கையில் கிடைத்ததை பறித்துக் கொண்டு செல்வர், ஆனால் தற்போது வாலிபரை மிரட்டி அவரது செல்போனிலிருந்து கூகுள் பே மூலம் ரூபாய் 50 ஆயிரத்தை தங்களது அக்கவுண்டிற்கு மாற்றச் சொல்லி கொள்ளையடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments