ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.. சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

0 843
ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.. சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி துறைமுகத்தில் வணிகரீதியான சரக்குகள் கையாளுவதற்கு உண்டான வசதிகள் மேம்படுத்தவும், 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 3,000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கபடும் எனவும், புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு 300 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும் எனவும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் பட்டியலின பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments