அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பிளாட்பாரத்தில் மோதி விபத்து.. மதுபோதையில் வந்த கல்லூரி மாணவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு!

0 2507

சென்னை அமைந்தகரையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் பதறவைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்கைவாக் அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த கல்லூரி மாணவர் இப்ராஹிம் தென்காசியை சேர்ந்தவர் என்பதும், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள நண்பரை பார்க்க வந்த இப்ராஹிம் நண்பர்களுடன் மதுஅருந்திவிட்டு, சிவபாரதி என்பவருடன் அண்ணாநகரில் உள்ள மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments