இந்திய நேரப்படி நாளை அதிகாலை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா... இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பாடலும், படங்களும் விருதுகளை வெல்லுமா.?

0 1237

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பாடலும், படங்களும் விருதுகளை வெல்லுமா? என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

லாஸ் ஏஞ்சலிசில் நடைபெறும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

முதன்முறையாக இந்த ஆண்டு 3 இந்திய படங்கள் மூன்று பிரிவுகளில் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஷானெக் சென் இயக்கிய 'ஆல் தட் ப்ரீத்ஸ்' (('All that Breathes')), சிறந்த ஆவண படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது.

மேலும், முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (('The Elephant Whisperers')) சிறந்த ஆவண குறும்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments