கொல்லப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் கலவரம்- 10 பேர் மீது வழக்குப் பதிவு

0 3096

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடியின் இறுதி ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்த பூவனூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெள்ளிக்கிழமை அன்று கமலாபுரம் அருகில் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போது, கடைகளை உடைத்தும், காவல்துறை வாகனங்களை தாக்கியும் கலவரத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்....

இந்நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட 30 பேர் மீதும், கலவரத்தில் ஈடுபட்டதாக 10 பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் நீடாமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments