ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா.!

0 704

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய தொழில்துறை பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்..

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதற்காக வரும் காலங்களில் அனைத்து தொழில்நுட்பங்களுடனும் CISF பலப்படுத்தப்படும் எனவும், CISF நடவடிக்கையால் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளனதாகவும் தெரிவித்தார்.

1969-ம் ஆண்டு CISF உருவாக்கப்பட்டதில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வெளியே அதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக, அனைத்து துணை ராணுவப் படைகளும் டெல்லிக்கு வெளியே தங்கள் நிறுவன நாளை கொண்டாடி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments