மத்திய ரயில்வேயின் அகலப்பாதை முழுவதும் மின்மயமாக்கம்.. நூறு சதவீத இலக்கை எட்டிய ரயில்வேக்கு பிரதமர் மோடி பாராட்டு!

0 1203

மத்திய ரயில்வேயின் அகலப்பாதை வழித்தடத்தில் நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது மகத்தான சாதனை என ரயில்வேத் துறையினருக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே வழித்தடத்தில் 3 ஆயிரத்து 825 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய மாசு தடுக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதற்கும் இந்த மின்மயமாக்கும் நடவடிக்கை உதவியிருப்பதாக மத்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments