பாட்டிகிட்ட சேட்டை கஞ்சா புள்ளீங்கோக்களை பைப்பால் விளாசிய பெண்..!விரட்டி பிடித்து வெளுத்து விட்ட சம்பவம்

0 1752

கன்னியாகுமரி அருகே கஞ்சா போதையில் பாட்டியை இளம்பெண் என நினைத்து துரத்திப்பிடித்த போதை மாணவர்களை இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில் இளம்பெண் ஒருவர் பைப்பால் விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள உணவகத்தில் தூய்மைப் பணி செய்து வரும் மூதாட்டி ஒருவர் வேலை முடிந்து நள்ளிரவில் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை பிடித்து பாலியல் சீண்டல் செய்ய முயல்வதாக கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்தனர். அந்த மூதாட்டி தன்னிடம் அத்துமீறியவர்களை இரும்பு பைப்பால் அடித்தார்

கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர்கள் அந்த அடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அங்கேயே நின்றனர்

தன்னைப் பிடித்த இளைஞர் மாட்டிக்கிச்சி வாங்கடா.. என்று கூறினான் என்று சொன்னதும் பைப்பை வாங்கிய அந்த மூதாட்டியின் மகள், தன் பங்கிற்கு அந்த கஞ்சா குடிக்கி இளைஞர்களை விளாசி எடுத்தார்

தப்பி ஓடியவர்களில் ஒவ்வொருவனாக போதையில் அங்கு வந்து சேர அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அடி விழுந்தது

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் கஞ்சா போதையில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை தேடிச் சென்றதாகவும் இருட்டில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை இளம் பெண் என்று நினைத்து மடக்கிப்பிடித்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அடி கொடுத்தவரோ , அடிவாங்கியவர்களோ புகார் அளிக்க மறுத்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தனியாக நடந்து சென்ற வட மாநில இளைஞரை அலேக்காக தூக்கி இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments