இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் பாலியல் சீண்டல்.... பொதுமக்கள் சேர்ந்து கும்மியதால் வாலிபர்கள் அலறல்..!

0 1721

கன்னியாகுமரியில் இரவில் கஞ்சா போதையில் இளம்பெண் என நினைத்து, மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை பெண் ஒருவர் சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு பத்தரை மணியளவில் மூதாட்டி ஒருவர், இளைஞர்கள் சிலரிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதனைப் பார்த்து விசாரித்ததில், உணவகத்தில் தூய்மைப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை கஞ்சா போதையில் இளம்பெண் என நினைத்து, அவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் தோவாளையிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்தப் பெண், கையில் வைத்திருந்த இரும்புக் குழாயைக் கொண்டு இளைஞர்களை வெளுத்து வாங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments