பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்த போது ஆண் நண்பர் மர்மமான முறையில் உயிர் இழப்பு..!

சென்னை பெரியமேட்டில் ஆண் நண்பரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவருடன் தவறான தொடர்பிலிருந்த பிரியா என்பவரும் வியாழக்கிழமை காலை பெரியமேட்டிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து, மது போதையுடன் தனிமையைக் கழித்துள்ளனர்.
இரவு அறையைவிட்டு வெளியே வந்த பிரியா, பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையின்போதும் விளையாட்டாக இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதுபோல் பாவனை செய்ததாகவும் எதிர்பாராத விதமாக பிரகாஷ் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரகாஷ் தலையில் உள் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாணையில், வீட்டுக்குக் கிளம்ப முயன்ற தன்னை கட்டாயப்படுத்தி மீண்டும் தனிமைக்கு அழைத்ததாகவும் அப்போது ஏற்பட்ட சண்டையில் பிரகாஷைப் பிடித்து தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்து இறந்துவிட்டதாகவும் பிரியா கூறியுள்ளார்.
Comments