பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய 3 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!

0 2171

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

மேல்புறம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர்  சாலையில் நடந்துச் சென்ற போது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்பெண் முன்னெச்சரிக்கையாக கைவசம் வைத்திருந்த மிளகாய் பொடியை அவர்கள் மீது தூவி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவர்கள் அப்பெண்ணை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பெண்ணை மீட்ட அருமனை போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ரவுடி திபின் மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments