என்எல்சி விரிவாக்க விவகாரம் - அதிமுக போராட்ட எச்சரிக்கை

என்எல்சி விரிவாக்க விவகாரத்தில் திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனில், அதிமுக சார்பில் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நெய்வேலி அனல்மின்நிலையமும் நிலக்கரி சுரங்கமும் நாட்டின் மின்சாரத் தேவைக்கு எந்த அளவு முக்கியமோ, அந்த அளவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் நலனும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
2000ம் ஆண்டு முதல் இதுவரை என்எல்சி விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்காத அவலநிலை நிலவி வருவதாகவும், இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் விளைநிலங்களை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments