வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க்கில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. 7 பேர் உயிரிழப்பு..!

0 1290

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர்.

இரவு 9 மணியளவில் யெகோவா சாட்சிகள் தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பித்து சென்றதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள போலீசார், அவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments