பாரம்பரிய முறை அடிப்படையில் சிவப்பு கம்பளத்துடன் "குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸி. பிரதமரை நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி"

0 1440

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்-க்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனிசை, பிரதமர் மோடி வரவேற்றார்.

தொடர்ந்து, இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை அல்பேனிசுக்கு, பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், ராஜ்கட் சென்ற அல்பேனிஸ், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments