ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி.. போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி கேட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி கேட்டு தப்பியோடினர்.
திம்மராஜம் பேட்டை பகுதியில் போலீசார் வழக்கம்போல் நள்ளிரவில் கண்காணித்த போது அங்குள்ள ஹிட்டாச்சி என்ற தனியார் நிறுவன வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றதை அறிந்தனர்.
போலீசார் உரிய நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 52 ஆயிரம் ரூபாய் தப்பியது என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments