போட்டிப் போட்டு சத்து மாத்திரைகள் விழுங்கிய 4 மாணவிகள் : ஒரு மாணவி உயிரிழந்ததால், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

0 2049

ஊட்டி அருகே சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

உதகை நகராட்சிப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்றுவரும் 4 மாணவிகள், போட்டிப்போட்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதில் 4 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மேற்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் மாணவிகள் 4 பேரும் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  ஒரு மாணவி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகித்த ஆசிரியை கலைவாணி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments