உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்..!

0 8004

உக்ரைனில் அதிவேகமாகச் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய கின்ஸல் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ஒரு ஏவுகணை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments