நைஜீரியாவில் பயணிகள் பேருந்து மீது ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியாவில், பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். லாகோஸ் நகரில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. காயமடைந்த நிலையில் இருந்த 84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநர், சிக்னலைக் கவனிக்காமல் கவனக்குறைவாகச் சென்றதால் விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
Comments