5ம் தலைமுறை போர் விமானத்திற்காக அமெரிக்க ராணுவ ரகசியங்களை சீனா திருடி வருவதாகக் குற்றச்சாட்டு..!

சீனா தனது மேம்பட்ட 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களைத் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக்கான முன்னாள் அதிகாரி பேசும்போது, சீனாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானம் J-20 இருப்பதாகவும், அந்த விமானத்தின் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயுத தகவல்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க ராணுவம் மேலும் சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஜேம்ஸ் தெரிவித்தார்.
Comments