போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் - ஒருவர் உயிரிழப்பு

போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் - ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சத்து மாத்திரை சாப்பிட்டதால் அரசுப்பள்ளி மாணவி உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை நகராட்சி உருது பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 9ம் தேதி பள்ளியில் வைத்து சத்து மாத்திரை வழங்கியதாகவும், மாத்திரைகள் உள்ள டப்பாவை ஆசிரியர்கள் அங்கேயே மறந்து வைத்த நிலையில், டப்பாவிலிருந்த மாத்திரையை போட்டி போட்டுக் சாப்பிட்ட 4 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
4 பேரும் மேற்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து உயர்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்லபட்ட சைபா பாத்திமா என்ற மாணவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
Comments