நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இருவரையும் 5 நாட்கள் போலீசார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான இருவரை, 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெரம்பூர் ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக்கடையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதி 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக ஏற்கனவே திவாகரன், கஜேந்திரன் என இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கங்காதரன், ஸ்டீபன் என இருவர் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சென்னை அழைத்து வந்துள்ள தனிப்படை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். நீதிமன்றம் 5 நாட்கள் அனுமதி கொடுத்துள்ளது.
Comments