பட்டதாரி பெண் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம்..!

0 1945

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பட்டதாரி பெண் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் மணிமொழி என்பவர் சென்னை, தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அதே நிறுவனத்தில் வேலை செய்த இரணியல் அருகே நெய்யூர் பகுதியைச் சேர்ந்த சுகின் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுகின் ஆசைவார்த்தைக்கூறி மணிமொழியை கர்ப்பமாக்கி மாத்திரை வாங்கி கொடுத்து கருவை களைக்க வைத்ததாகவும், கடந்த 2ம் தேதி திருமணம் செய்வதாக நாகர்கோவில், கோட்டார் ரயில் நிலையத்திற்கு வரவழைத்து மணிமொழியை தாக்கி அங்கே விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றிய காதலன் வீட்டிற்கு முன்பு மணிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுட்டார். இரணியல் போலீசார் அவரிடம் பேச்சுவார்தை நடத்தி விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments