இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கண்டுரசித்த பிரதமர்கள்..!

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனிசும் கண்டு களித்தனர்.
நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியை காண வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் பிரதமர் மோடிக்கு, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, கோல்ப் காரில் மைதானத்தில் வலம் வந்த இருவரும் ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இரு அணி கேப்டன்களுக்கும் டெஸ்ட் தொப்பிகளை வழங்கிய பிரதமர்கள், இந்திய - ஆஸ்திரேலிய அணி வீரர்களை சந்தித்தனர்.
பின்னர் வீரர்களுடன் இணைந்து, இருநாடுகளின் தேசிய கீதங்களுக்கு இருநாட்டு பிரதமர்களும் மரியாதை செலுத்தினர்.
Comments