''குரூப்-4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..'' - டிஎன்பிஎஸ்சி..!

குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற இத்தேர்வை, ஆயிரக்கணக்கானோர் எழுதியிருந்தனர்.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக தேர்வு முடிவுகள் வெளியாவது, தாமதமாகி வந்த நிலையில், அதை உடனே வெளியிடக்கோரி, ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வந்தது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments