ஒடேசா, கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர் தாக்குதல்..!

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்று ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் சரமாரித் தாக்குதலால் உள்கட்டமைப்புகள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்முட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் வீரர்கள் முறியடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பக்முட் மற்றும் டான்பஸ் பகுதியில் நடைபெற்றுவரும் போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Comments