பிதான்நகர் பகுதியில் கால் சென்டர் அமைத்து பணமோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

மேற்குவங்கம் பிதான்நகர் பகுதியில் வாகன சோதனை மற்றும் இரண்டு குடியிருப்பு வளாகங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலி கால் சென்ட்டர் அமைத்து மக்களிடம் ஆன்லைன் மூலம் மோசடியாகப் பணம் பறித்த ஒரு கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 400 கணினிகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் உள்பட பலரிடம்இந்த கும்பல் ஆன்லைன்மூலமாக பணம் மோசடி செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments